| வித்தினைப் போற்றித் தூவும் விளைநிலம் பழுது பார்த்து சுற்றிடும் மிருகவாசை துடைத்திடா வேலிசுற்றி பத்தியிற் காத்துப் பண்ணைப் பயிரது செய்துவிட்டால் சொத்தையாய்ச் சேலை யாகத்தோன்றுமோ செந்நெல் சொல்வாய். | |
கர்ப்பிணிகளை நடத்தும் முறை |
பல்லவி |
| கர்ப்பிணிப் பெண்டுகளைக் கருணையுடன் மிகவும் கவனிக்க வேண்டுவமே | |
அனுபல்லவி
|
| அற்பமென்றவர்களை அசட்டைசெய்வீரெனில் ஆண்டவன் சாபமுண்டு. | |
சரணங்கள்
|
| கொஞ்சும் மொழிகள் சொல்லிக்கோதையிளங்கொடியைக் குதூகலப்படுத்தி வைப்பீர் அஞ்சும் படிக்குச் செய்து அடிப்பதும் திட்டுவதும் ஐயையோ ஆகாது | (கர்) |
| குற்றங்கள் செய்திடினும் முற்றும் மனம்பொறுத்துக் குணமுடன் வார்த்தை சொல்வீர் சற்றும் அவர்மனதில் சஞ்சலமொன்றுமின்றி சந்தோஷம் புரிவீர். | (கர்) |
| நல்லகதைகள் தினம் சொல்லியவர் மனத்தை நயம்படச் செய்து வைப்பீர் அல்லும்பகலும் அவர் ஆண்டவனைத் துதித்து அறஞ்செய வரந்தருவார். | (கர்) |