| ஆகும் மற்ற வித்தைகற்று உலகை வென்று ஆட்டினும் நாக ரீகம் அல்லவென்று நாம் நடந்து காட்டுவோம். கொன்று வீழ்த்தல் வீரமென்னும் கொச்சை யான கொள்கையை இன்று தொட்டு மாற்றிவிட்டு உண்மை வீரம் கொள்ளுவோம் தொன்று தொட்டுக் கருணைகற்ற பரத நாட்டில் தோன்றினோம் நன்று இந்தச் சேவைக்கேது வேறு நம்மைப் போன்றவர். தமிழ ருக்குக் கருணை எண்ணம் தாயின் பாலில் தந்தது குமிழை யொத்த உயிரைநல்ல கொள்கைக் கீய முந்திடும் அமுத மொத்த காந்திமார்க்கம் தமிழ கத்தின் செல்வமாம் நமது சேவை அதனை ஏந்தி நாட்டி லெங்கும் சொல்வதாம். | | ஜவஹர்லால் நேரு | | மன்னுயிரைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தி மலைமலையாய்ப் பிணக்குவியல் குவித்ததாலே மன்னரெனப் பலர்வணங்கத் தருக்கி வாழ்ந்தோர் மாநிலத்தில் எத்தனையோ பேரைக்கண்டோம் | | |
|
|