1. நூல் விளக்கம்
பழந்தமிழ் இலக்கியங்கள், பத்துப்பாட்டு,
எட்டுத் தொகை, பதினெண்
கீழ்க்கணக்குஎன்று வரிசையாக வழங்கப் படுகின்றன. இவை தொகை நூல்கள்
என்று கூறப்படும். பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள். பத்துநூல்களைக்
கொண்டது பத்துப்பாட்டு; எட்டு நூல்களைக் கொண்டது
எட்டுத் தொகை; பதினெட்டு
நூல்களைக் கொண்டதுபதினெண்கீழ்க்கணக்கு.
சங்க நூல்களா?
இத்தொகை
நூல்களிலே பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் சங்ககால
இலக்கியங்கள்;
பதினெண் கீழ்க்கணக்கு சங்க காலத்திற்குப் பின்தோன்றிய
நூல்கள். சங்ககாலம் என்பது
ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு
ஆண்டுகளுக்கு முன்பாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும்
சங்ககாலம் என்று கருதப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு
முன்தோன்றிய நூல்களே சங்க இலக்கியங்களாகும். பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களையும்
சங்க இலக்கியங்கள் என்று கூறுவோர் உண்டு.
1. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்னும் தொகை நூல்களின்
வரிசையிலே பதினெண்
கீழ்க்கணக்கும் ஒன்று.
2. இறையனார் அகப்பொருளிலே
காணப்படும் சங்க நூல்களின்
வரிசையிலே பத்துப்பாட்டு காணப்படவில்லை. ‘‘அவர்களால்
பாடப்பட்டன.(கடைச் சங்கப்
புலவர்களால்)
நெடுந்தொகை நானூறும்,
குறுந்தொகை நானூறும், நற்றிணை
|