நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது
கலியும், எழுபது
பரிபாடலும்,
கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும்
என்ற இத் தொடக்கத்தன’’ இது
இறையனார்
அகப்பொருள் உரை. இது
கடைச் சங்ககாலத்து நூல்களைக் குறித்தது.
இதனுள்வரும் இத்
தொடக்கத்தன
என்ற சொற்றொடரைக் கொண்டே பத்துப் பாட்டும்
சங்கநூல் என்று கொள்ளுகின்றனர். பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களும் சங்க
நூல்களேயென்பதையும், அச் சொற்றொடராலேயே கொள்ளலாம்.
3. கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்களிலே, கபிலர், கூடலூர் கிழார்,
பொய்கையார்
முதலியவர்களும்
காணப்படுகின்றனர். இவர்கள் சங்ககாலப்
புலவர்கள். ஆகையால்
இவர்களால் இயற்றப்பட்ட நூல்கள்
சங்க காலநூல்களாகத்தான் இருக்கவேண்டும்.
4. பதினெண் கீழ்க்கணக்கு நூல் பாடல்கள் எல்லாம் வெண்பாக்களே.
சங்க காலத்தில்
ஆசிரியப்பா,
வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா, ஆகிய
நால்வகைப் பாடல்களிலேதான்
நூல்கள் இயற்றப்பட்டன.
ஆதலால்
பதினெண் கீழ்க்கணக்கும் சங்க நூல்கள்தாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் சங்ககால இலக்கியங்கள்
தாம் என்பதற்கு
இவ்வாறு
காரணங்காட்டுகின்றனர்.
சங்கத் தொகை
நூல்களோடு சேர்த்து எண்ணப்படுவதனால் மட்டும்
சங்க நூல்கள்
என்று தீர்மானித்துவிட முடியாது.
பிற்காலத்தினர்,
தங்கள்காலத்திற்கு முன்னிருந்த
நூல்களைக் குறிக்கவே, பத்துப்பாட்டு,
எட்டுத்
தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று
வரிசையாக வழங்கினர்.
|