சங்க நூல்களுக்குப் பிற்பட்டவை
பத்துப் பாட்டிலே காணப்படும்
பழக்க வழக்கங்களும், எட்டுத் தொகை
நூல்களிலே காணப்படும் பழக்க வழக்கங்களும் ஒத்திருக்கின்றன. ஆதலால்,
அத்தொகுதி சங்ககால நூல்
என்பதில் ஐயம் இல்லை. பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களிலே சங்ககாலத் தமிழர்களின்
பழக்க வழக்கங்களை
ஏற்றுக் கொள்ளாத சில பகுதிகள் காணப்படுகின்றன. ஆதலால்
இத்தொடக்கத்தன
என்பதனால் பத்துபபாட்டைச்
சங்க இலக்கியம் என்று
ஏற்றுக்
கொள்ளுவது பொருந்தும்; பதினெண் கீழ்க்கணக்கையும் ஏற்றுக்
கொள்ளுவது பொருந்தாது.
பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களிலே மதுபானமும், புலால்
உணவும்
கண்டிக்கப்படவில்லை. பண்டைத் தமிழர்கள் இவற்றைச் சிறந்த
உணவாகவே உண்டனர்.
ஆண்கள் பரத்தையர்களை விரும்பித்திரியும்
வழக்கத்தைச் சங்க இலக்கியங்கள் கடிந்து
கூறவில்லை. பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களிலே கள், புலால் உணவு, வேசையர் நட்பு
இவைகள் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. கொல்லா விரதம்
போற்றப்படுகின்றது.
இவை போன்ற பல செய்திகளைக் கொண்டு பதினெண்
கீழ்க்கணக்கின் காலம் சங்க
காலத்திற்குப் பிற்பட்டதுதான் என்று முடிவு
கட்டுகின்றனர். இதைப் பற்றிப் பின்னால்
திருக்குறளைப்பற்றி
எழுதுமிடத்திலும் விளக்கப்பட்டிருக்கின்றது.
ஒரே
பெயருள்ள புலவர்கள் பல காலங்களில் இருந்திருக்கின்றனர்
ஆதலால் பெயர்
ஒற்றுமையைக்கொண்டு ஒரு நூலின் காலத்தைத்
தீர்மானிக்க முடியாது. ஒளவையார் என்ற
பெயர் படைத்த புலவர்கள்
மூவர்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றனர். கபிலர் என்ற
பெயருள்ளவர் பலர் உண்டு;
|