உயரந்த தோள்களையுடைய சோழனது கோபம் வலிமையுடன்
வானத்தில்
அசைந்து
கொண்டிருக்கும் மதில் பொருந்திய கோட்டையைத்
தொலைத்தலால்’’
இச்செய்யுட் பகுதி
இக்கதையைக் கூறுகின்றது.
மனுநீதி கண்ட சோழன்
வரலாறும் இப்பழமொழியில் கூறப்படுகின்றது.
குற்றவாளிக்கு மன்னிப்பில்லை. அவன்
மீதுள்ள வழக்கிற்குக் காலக்கெடு
கிடையாது. குற்றவாளியின் மேல் உள்ள குற்றம் எவ்வளவு
காலம் கழித்து
வெளிப்பட்டாலும் அவனைத
தண்டிக்கலாம். இதற்கு உதாரணமாகவே
மனுநீதி
கண்ட
சோழன் வரலாறு சொல்லப்படுகிறது. பெரிய புராணத்தில்
கூறப்படும்
மனுநீதி
கண்ட சோழன் வரலாற்றுக்கும் பழமொழியிலே
சொல்லப்படும்
இவ்வரலாற்றுக்கும்
மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது.
‘‘மனுநீதிகண்ட சோழன் திருவாரூரிலே அரசாட்சி செய்தவன். அவன்
மகன்
வீதிவிடங்கன் ஒருநாள் தேரில் ஏறிக்கொண்டு போனான். அப்போது
ஒரு
பசுங்கன்று
துள்ளி ஓடிவந்து அவனுடைய தேர்ச்சக்கரத்திலே
மாட்டிக்கொண்டு
மாண்டது. அதைக்
கண்ட தாய்ப்பசு துக்கந் தாங்க
முடியாமல் அரண்மனை
வாயிலையடைந்தது; ஆராய்ச்சி
மணியைக்
கொம்பினால் ஆட்டியது. அந்த
மணியோசை கேட்ட மன்னவன் வெளியில்
வந்தான்; பசுவின் துயரைக்
கண்டான்; உடனே மந்திரிகளை அழைத்து
உண்மையைத்
தெரிந்துகொண்டான்.
இப்பசுவைப்போலவே நானும் என்
மகனை இழந்து வருந்துவேன்,
என்று முடிவு
செய்தான். மந்திரிகள்
எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. தன் மகனைக்
கிடத்தி அவன் மீது
தேரையேற்றிக் கொன்றான்’’ இதுதான் பெரிய புராண
வரலாறு.
|