கரிகாற்சோழனுடைய மற்றொரு வரலாறும் இந்நூலிலே
காணப்படுகின்றது.
பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் உயிர்
தப்பினவர்கள்,
முயற்சியுடையவர்களாயிருந்தால் தம் காரியத்திலே வெற்றி
பெறுவார்கள்.
இக்கருத்துடைய
பழமொழியை விளக்கும் பாடல் அது.
‘சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைத்தலை
செயிர்அறு செங்கோல் செலீஇனான், இல்லை
உயிர் உடையார்
எய்தா வினை.
பகைவரால் தான் இருந்த மாளிகை கொளுத்தப்பட்டது; ஆனால் அதில்
அகப்பட்டு மாளாமல் உயிர் தப்பினான்
கரிகால்சோழன். அவன் தன்
முயற்சியினால், தன் மாமனாகிய இரும்பிடர்த் தலையார் என்பவனுடைய
துணையைக் கொண்டு, தன் அரசாட்சியைப் பெற்றான்; குற்றமற்ற நெறியிலே
செங்கோல் செலுத்தினான்.
ஆதலால் உயிருள்ளவர் வெற்றிபெறாத
வினையில்லை’’
இதுவும் கரிகாற் சோழனுடைய சிறப்பைக் காட்டும் வரலாறு.
சோழ மன்னர்களின் வரலாற்றிலே தூங்கெயில் எறிந்த தொடித்தோள்
செம்பியன்
என்பவன் பெயர்
காணப்படுகின்றது. இவன் வரலாற்றுக் குறிப்பு
பழமொழியிலும்
காணப்படுகின்றது. அசுரர்களுக்கு ஒரு
கோட்டையிருந்தது.
அதன் மதில்கள் மிகவும்
அழுத்தமானவை. அக்கோட்டை வானத்தில்
உலவுந்தன்மையுள்ளது.
அதிலே அசுரர்கள்
வாழ்ந்தனர். அவர்கள்
தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் வேண்டுகோளின்படி
தொடித்தோள் செம்பியன் அக்கோட்டையை அழித்தான்; தேவர்களைக்
காப்பாற்றினான்.
இதனால்
அவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட்
செம்பியன்
என்று பெயர் பெற்றான்.
|