பக்கம் எண் :

128சாமி சிதம்பரனார்

கல
கல்லாம் பாகம் படும்’’ என்பது. மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
என்பதும் இக்கருத்துள்ள பழமொழிதான். குலவித்தை கல்லாமலே
வந்துவிடும் என்பதற்கு உதாரணமாகக் கரிகாற்சோழனுடைய வரலாறு ஒன்று
ஒரு வெண்பாவில் எடுத்துக் காட்டப்பட்டிருகின்றது.
 
  ‘‘உரை முடிவு காணான் இளமையோன், என்ற
நரைமுது மக்கள் உவப்ப,-நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன், குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
 

இவன் இளமைப் பருவம் உள்ளவன்; நாம் உரைக்கும் வழக்கைக்
கேட்டுச் சரியான முடிவு கூறுவதற்குத் திறமையற்றவன் என்று நினைத்தனர்
நரைத்த முதியவர்கள்; அவர்கள் ‘‘சரியான நீதிதான்’’ என்று உவக்கும்படி,
நரை முடித்துக்கொண்டு வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டுத்
தீர்ப்பு கூறினான் சோழன். ஆதலால் தம் குலத்துக்குரிய வித்தைகள்,
கற்பதற்கு முன்பே நன்றாக வந்துவிடும்’’.

இச்செய்யுளிலே கரிகாற் சோழனுடைய வரலாறு சுட்டப்படுகின்றது.
கரிகாற்சோழன் இளம் பருவத்திலே பட்டத்திற்கு வந்துவிட்டான்.
அக்காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வயதேறிய இருவர் தங்களுக்குள
மாறுபட்டனர். கரிகாலனிடம் வழக்குரைக்க வந்தனர். அவன்
இளைஞனாயிருப்பதைக் கண்டனர். இவனால் நமது வழக்கிலே நீதி
காணமுடியுமா என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் அறிந்த
கரிகாலன், அந்தப்புரம் சென்றான், நரைத்த, தாடி, மீசை, தலை மயிருடன்
திரும்பி வந்தான். அவர்கள் வழக்கைக் கேட்டான். சரியான தீர்ப்பளித்தான்.
அவர்களும் மகிழ்ந்தனர். பிறகு அவ்வாறு தீர்ப்பளித்தவன் கரிகாலனே
என்பது கண்டு வியந்தனர். இவ்வரலாற்றையே இந்நூல் குறித்தது.