பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்161

New Page 1
பொன் பாண்டத்திலே புலிநகம் போன்ற வெண்மையான சோறு,
சர்க்கரை, பால் இவைகளைத் தம்மை மதியாதாரிடம் பெற்று உண்பதனால்
இன்பம் இல்லை. இதைவிட உயிர்போன்ற உறவு பூண்டவரிடம், உப்பில்லாத
கூழை மண்பாண்டத்திலே பெற்று உண்டாலும் இனிமையுண்டு‘‘.   (பா.206)
 
  ‘‘நாள்வாய்ப் பெறினும் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்
 

நாள்தோறும் குறித்த நேரத்திலே கிடைப்பதாயினும், தன்னை
விரும்பாதார் இல்லத்திலே அவர்கள் உதவும் பொரிக்கறியோடு கூடிய சோறு
இனிமை தராது; உண்டால் வேம்பு போலவே கசக்கும்’’. (பா.207)

இவைகள் விரும்பாதார்-மதியாதார்-பகைவர் இல்லத்திலே உணவுண்பது
தீமை என்பதை எடுத்துக் காட்டின. அவ்வாறு செய்வது மனிதத் தன்மையற்ற
செயல்; மானங்கெட்ட நடத்தை என்பதையும் உணர்த்தின.

சாதி வேற்றுமை

நாலடியார் காலத்திலே தமிழ் நாட்டிலே சாதி வேற்றுமை
நிலைத்திருந்தது. வருணாசிரம தருமக் கொள்கைகள் வேரூன்றியிருந்தன.
பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கருத்து பரவியிருந்தது.
 

  ‘‘தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணில் கடைப்பட்டான்
 

தோணி ஓட்டுகின்றவன், பழமையான நால்வகை வருணங்களிலே,
ஆராய்ந்து பார்த்தால் கடைப்பட்ட வருணத்தைச் சேர்ந்தவன்’’

தமிழகத்திலே பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நான்கு
வருணங்களும் இருந்தன. கடைப்பட்ட சூத்திர