பக்கம் எண் :

160சாமி சிதம்பரனார்

New Page 1

அழகும் அழகல்ல. உள்ளத்திலே, ‘‘நாம் நல்ல வழியில் நடக்கின்றோம்; நடுவு
நிலைமையில் வாழ்கின்றோம்’’ என்னும் குற்றமற்ற நிலைமையை
உண்டாக்குவதனால், கல்வியின் அழகுதான் சிறந்த அழகாகும்’’. (பா.131)

இச்செய்யுள் ஆண்களுக்கும் கல்வி வேண்டும்; பெண்களுக்கும் கல்வி
வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. குஞ்சி-என்பது ஆண்களின்
தலைமயிர்; உடுக்கும் ஆடையிலே கண்ணைக் கவரும் கரை அமைந்திருக்க
வேண்டும் என்று ஆண்களும் விரும்புவர்; பெண்களும் விரும்புவர்; மஞ்சள்
பூசிக்கொண்டு குளிப்பது பெண்கள் வழக்கம். ஆகையால் இது
இருபாலர்க்கும் பொதுவான செய்யுள்.

மானமுள்ள வாழ்வு

எவ்வளவு துன்பம் வந்தாலும் மானங்கெடாமல் வாழவேண்டும்.
பசிப்பிணியால் சாவதாயிருந்தாலும் தன்னை இழிவாக மதிப்பவர்களின்
இல்லத்திலே உணவருந்தக் கூடாது இதுவே தமிழர்களின் சிறந்த பண்பாடு.
இந்தப் பண்பாட்டை நாலடிப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
 

  ‘‘தன் உடம்பின்
ஊன் கெடிதும் உண்ணார்கைத்து உண்ணற்க
 
தன் உடம்பில் உள்ள சதை வற்றிப்போனாலும் - உடம்பு
எலும்புந்தோலுமாக இளைத்துப் போனாலும்,-உண்ணத்தகாத பகைவர்
கையிலிருந்து உணவு பெற்று உண்ணக் கூடாது’’.                 (பா.80)
 

 

‘‘பொற்கலத்துப் பெய்த புலி உகிர் வான்புழுக்கல்
அக்காரம், பாலோடு, அமரார் கைத்து உண்டலின்
உப்புஇலி புற்கை, உயிர்போல் கிளைஞர்மாட்டு,
எக்கலத்தானும் இனிது.