பக்கம் எண் :

176சாமி சிதம்பரனார்

New Page 1

கருதிய ஒரு உத்தமத் தமிழ்ப் பெரியார்; இதுதான் நாம் அவரைப் பற்றி அறியும் உண்மை வரலாறு.

பல நூல்களின் சாரம்

உயர்ந்த அறங்களை யெல்லாம் ஒன்று திரட்டி உரைக்கும் நூல்

திருக்குறள். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பலர் திருக்குறளின் மாண்பைப்
பாராட்டிப் பாடியிருக்கின்றனர். திருக்குறளின் பெருமையைத் தெரிந்து
கொள்ளுவதற்கு அவர்கள் வாய் மொழிகளே போதுமானவை
 

  ‘‘சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள்எல்லாம்-தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார்
எப்பா வலரினும் இல்
 

பல சாத்திரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை
யெல்லாம், எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி மூன்று பகுதியாக வகுத்துக்
கூறிய திருவள்ளுவர் முதற்பாவலர் ஆவார். அவரைப் போன்ற கவிஞர் வேறு எம்மொழிக் கவிஞர்களிலும் இல்லை‘‘.

(ஆசிரியர் நல்லந்துவனார்)
 

  ‘‘செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே

வேதத்திற்கும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கும் பொருள்

ஒன்றதான்’’ (வெள்ளி வீதியார்)
 

  ‘‘எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும்-முப்பாற்குப்
பாரதம், சீராம கதை, மனுப் பண்டைமறை
நேர்வன; மற்றில்லை நிகர்.
 

எல்லாப் பொருள்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும்படி
சொல்லியிருக்கின்ற திருவள்ளுவருடைய