பிறந்தவிடத்திலே அப்படி அப்படியே போட்டுவிட்டு ஆதியும், பகவனும்
போய்விட்டனர்.
அப்பிள்ளைகளைப் பார்த்தவர்கள் எடுத்து வளர்த்தனர்.
இவ்வாறு
பிறந்த பிள்ளையே
வள்ளுவர். அவர் மயிலாப்பூரில்
போடப்பட்டார்; ஒரு
வள்ளுவன் அவரை எடுத்து
வளர்த்தான். அதனால்
வள்ளுவர் என்று பெயர்
பெற்றார். இது ஒரு கதை. இதற்குக் கபிலர்
அகவல் என்னும் பிற்காலத்துச் சிறு
நூலே ஆதாரம்.
திருவள்ளுவர் மதுரையிலிருந்தவர் என்று திருவள்ளுவ மாலையில் ஒரு
செய்யுளில்
காணப்படுகின்றது.
திருவள்ளுவர், வள்ளுவர்
மரபைச் சேர்ந்தவர்தான். வள்ளுவர் மரபைச்
சேர்ந்தவர் என்று இகழ்ந்துரைப்பவன்
அறிவற்றவன்; அவர் அறிவாளி,
ஒழுக்கத்தால் உயர்ந்தவர் ஆதலால் அவரைப்போற்றுவதே
அறிஞர் கடமை.
என்ற கருத்து திருவள்ளுவ மாலைச் செய்யுள் ஒன்றிலே காணப்படுகின்றது.
இவ்வாறு திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள்
காணப்படுகின்றன. அவருடைய உண்மை வரலாற்றை அறிவதற்கு
இடமில்லை.
அவர் பிறப்பு வளர்ப்பு எப்படியாயினும், அவர் தமிழ்நாட்டில்
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாகத் தெய்வப் புலவர் என்ற பெயர் பெற்று
வாழ்கின்றார். திருவள்ளுவரை நான்முகன் என்று போற்றியிருக்கின்றனர்.
அவரைப் பொய்யா மொழியார் என்று
பாராட்டியிருக்கின்றனர்.
திருக்குறளைத்
தமிழ் வேதம் என்று கொண்டாடி வருகின்றனர்.
திருக்குறளையும் பொய்யா மொழி என்று பாராட்டினர்; பாராட்டுகின்றனர்.
திருவள்ளுவர் தமிழ்
நாட்டிலே பிறந்தவர்; சாதி மத பேதம்
பாராட்டாதவர்; மனித சமுதாயத்தையும்,
உலகையும் ஒன்றாகக்
|