எந்தத் தீமையையும் செய்யமுடியும். ஆதலால் அவர்களுக்கு அடங்கியே
வாழவேண்டும்
என்று நம்பினர்.
‘‘குறி அறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா
பாம்பாட்டுவதற்குரிய
மந்திரம் முதலியவற்றை அறியாதவன்
பெரியபாம்பை
ஆட்டுவது துன்பந்தரும்’’ (பா.30)
பாம்புகளை மந்திரத்தால் ஆட்டுவிக்கலாம் என்ற நம்பிக்கை பண்டைக்
காலத்திலும்
இருந்தது என்பதைக்
காட்டுகின்றது இது.
‘‘ஒடுங்கி அரவு உறையும்இல் இன்னா
பாம்பு பதுங்கியிருக்கின்ற வீட்டில் வசிப்பது துன்பந்தரும்’’. (பா.31)
சில கிராமங்களில் பழைய வீடுகளிலே பாம்பு உண்டு. அதை
மனைப்பாம்பு என்பர்;
அடிக்கக்கூடாது
என்றும் கூறுவர். இது மூடநம்பிக்கை
இந்த நம்பிக்கையைக் கண்டிக்கின்றது
இது.
இவ்வாறு பல நீதிகளை இந்நூலிலே காணலாம். ஒவ்வொரு
வெண்பாவிலும் நான்கு
நான்கு நீதிகள்
கூறப்பட்டிருக்கின்றன. இந் நீதிகளில்
பல நெஞ்சில் நிலைத்திருக்க
வேண்டியவை.
|