பக்கம் எண் :

78சாமி சிதம்பரனார்

New Page 1

‘‘பார்ப்பார் இல் கோழியும்நாயும் புகல்இன்னா

பார்ப்பார் வீட்டிலே கோழியும் நாயும் நுழைவது துன்பம் தரும்’’.                 (பா.3) பார்ப்பார்கள் கோழியையும் நாயையும் அருவருத்தனர். இரண்டும் மலந்தின்பவை; ஆதலால் அவைகள் வீட்டில் நுழைந்தால் ஆசாரத்திற்குக் குறைவு என்று கருதினர்.

‘‘இன்னா ஒத்துஇலாப் பார்ப்பான் உரை.

வேதத்தை ஓதாத பார்ப்பான் அறிவில்லாதவன். ஆதலால் அவன் கூறுவதை நம்பினால் துன்பந்தான்’’.(பா.22)

இவைகள் பார்ப்பாரைப் பற்றி கூறப்பட்டிருப்பவை.

‘‘இன்னா காப்பாற்றா வேந்தன் உலகு

குடிகளைக் காப்பாற்றாத வேந்தன் உள்ள நாட்டிலே வாழ்வது
துன்பந்தரும்’’                                            (பா.3)

‘‘கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா

கொடுங்கோல் செலுத்தும், கொலைத் தொழிலையுடைய மன்னர்களின்

ஆட்சியின் கீழே வாழ்வது துன்பம்’’.                   (பா.4)

‘‘முறை யின்றிஆளும் அரசு இன்னா

நீதியில்லாமல் ஆளுகின்ற அரசாட்சியின் கீழ் வாழ்வது துனபந்தரும்’’.         (பா.6) இவைகள் அரசு முறையைப் பற்றிக்கூறியவை.

திருவுடை யாரைச் செறல் இன்னா

செல்வம் உள்ளவரைப் பகைத்துக் கொள்வதனால் துன்பம்
வரும்’’                       (பா.5)

அக்காலத்திலே செல்வர்களுக்கே சமுதாயத்தில் மதிப்பு
மிகுதி.அவர்களைப் பகைத்துக்கொண்டால் அவர்களால்