பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்77

அறத
அறத்தையும் போதிப்பவை. அவைகளில் சிலவற்றைக் காண்போம்.
 
  ‘‘பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டுஉரைத்தல் இன்னா;
இருள்கூர் சிறுநெறி தாம்தனிப் போக்கு இன்னா;
அருள் இலார் தம்கண் செலவு இன்னா; இன்னா
பொருள் இலார் வண்மை புரிவு.
 
பாட்டின் பொருளை அறிந்து சுவைக்கும் அறிவுள்ளவர் இல்லாத
இடத்தில் செய்யுளைக் கூறுதல் துன்பம். இருள் நிறைந்த சிறிய வழியிலே
தனியே செல்லுதல் துன்பம். இரக்கமில்லாதவரிடம் சென்று ஒன்றைக்
கேட்பதுதுன்பந்தரும். செல்வம் இல்லாதவர் பிறருக்குப் பொருள்
கொடுக்கவிரும்புதல் துன்பந்தரும்’’ (பா.11)
 
  ‘‘பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா;
அரியவை செய்தும் எனஉரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம்உற்ற கூற்றுஇன்னா; இன்னா
பெரியார்க்குத் தீய செயல்.
 

பெரியாரோடு கொண்ட நட்பை விடுவது துன்பம். தம்மால் செய்ய
முடியாத காரியங்களைச் செய்து முடிப்போம் என்று கூறுவது துன்பமாகும்.
தம்மிடம் அன்பில்லாதவர்பால் தாம் அடைந்த துன்பத்தை உரைத்தல்
துன்பமாகும். பெருமையுள்ளவர்க்குத் தீமை துன்பமாகும்’’ (பா.25)

இந்த இரண்டு பாடல்களில் உள்ள அறங்கள் சிறந்தவை; என்றும்
மக்களால் பின்பற்றக்கூடியவை.

பழக்க வழக்கங்கள்

பண்டைத் தமிழகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் சிலவற்றையும்
இந்நூலிலே காணலாம். பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த
நம்பிக்கைகள் சிலவற்றையும் காணலாம்.