என்பவை புலால் உணவைக் கடிந்து கூறும் பகுதிகள். ஆதலால் இவர்
பாரியின் நண்பராக
வாழ்ந்த அந்தக்
கபிலராக இருக்க முடியாது.
கபிலர் அகவல் என்னும் நூல் ஒன்று உண்டு. அது சாதி வேற்றுமையை
வன்மையாகக்
கண்டிப்பது. சங்க
நூல்களின் கருத்துக்களுக்கு மாறாக,
ஆரியர்களே, நால்வகைச் சாதிப்
பிரிவினையை இந்நாட்டிலே
புகுத்தியவர்கள் என்று கூறுகின்றது. அது
பிற்காலத்திலே
எழுந்த நூல்.
கபிலர் அகவல் பாடிய கபிலர்,
சாதி வேற்றுமையை
ஒத்துக்கொள்ளாதவர்.
இன்னாநாற்பது பாடிய கபிலர் சாதி என்று
சொல்லாவிட்டாலும்
குடிப்பிறப்பில் உயர்வு
தாழ்வு உண்டு என்று ஒத்துக்
கொள்ளுகிறார்.
‘‘குலத்தில் பிறந்தவன் கல்லாமை இன்னா
உயர்ந்த குலத்திலே பிறந்தவன் கல்வி கற்காமல் இருப்பது அவனுக்குத்
துன்பமாகும்”.
‘‘குலம் இல்வழிக் கலத்தல் இன்னா
நல்ல குலம் இல்லாத குடியிலே மணம் செய்து கொள்ளுதல் துன்பம்
தரும்’’
இவைகள் இன்னாநாற்பதில் உள்ளவை. இவைகள் பிறப்பிலே உயர்வு
தாழ்வு உண்டு
என்பதை ஒத்துக்
கொள்ளுகின்றன. ஆதலால் இக்கபிலர்
சங்ககாலக் கபிலரும் அல்லர்.
கபிலர் அகவல் பாடிய கபிலரும்
அல்லர்,
வேறு யாரோ ஒரு கபிலர். இவர் வரலாறு
தெரியவில்லை.
செய்யத் தகாதவை
இன்னா நாற்பதில் கூறப்படும்
நீதிகள் மிகவும் சிறந்தவை.
இக்காலத்திற்குப்
பொருந்தாதவை சில காணப்படலாம். பெரும்பாலான
கருத்துக்கள் மக்களுக்கு அறிவையும்,
|