பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்75

New Page 1

இக்கபிலர் அந்தணர், பாரியின் நண்பர். மாமிச உணவு உண்டவர்.
புறநானூற்றில் 14-வது பாடல் இவர் பாடியது. அதில் இவர் மாமிச உணவு
உண்பவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனைக் காணச் சென்றார் கபிலர். அவன் கபிலர்க்குக் கைகொடுத்து வரவேற்றான். கபிலர் கை, பூப்போல மென்மையாக, வழவழ வென்றிருந்ததை உணர்ந்தான் ஆதன். ‘‘என் கை மட்டும் கடினமாக இருக்கிறது. உன் கை மென்மையுடன் இருப்பது
ஏன்?’’ என்றான் ஆதன். ‘‘உன் கை, குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கும்
கை; கணையை எடுத்து வில்லிலே தொடுத்துவிடும் கை; இரவலர்க்கு நல்ல அணிகலன்களை அள்ளி வழங்கும் கை; ஆகையால் காய்ச்சிப் போய்க் கரடு முரடாக இருக்கின்றது. என் கை நன்றாகச் சமைத்த ஊனையும் துவையலையும், கறியையும், சோற்றையும் அள்ளி அள்ளி உண்ணுகின்ற கை;
உண்ட சோறு செரிமானம் ஆகவில்லையே என்று வருந்தி வயிற்றைத்
தடவிக்கொண்டிருக்கும் கை. ஆகையால் உன் கை கடினம்; என் கை
மென்மை’’ என்று கூறினார். இதனால் சங்ககாலக் கபிலர் புலால் உணவை
வெறுத்தவர் அல்லர்
என்று காணலாம்.

இன்னாநாற்பதில் புலால் உணவு வெறுக்கப்படுகின்றது.

‘‘புலைஉள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா

புலால் உணவை விரும்பி வாழ்வது மக்கள் உயிர்க்குத் துன்பம்
தருவதாகும்’’ (பா.13)

‘‘ஊனைத்தின்று ஊனைப்பெருக்குதல் முன்இன்னா

மற்றொரு உயிரின் ஊனைத் தின்று, தன் உடம்பை வளர்த்தல்
துன்பமாகும்’’ (பா.23)