11. இன்னா நாற்பது
மக்களுக்குத் துன்பந்தருவன இவை என்று கூறும் நாற்பது
வெண்பாக்கள் இந்நூலில்
உண்டு. இதனாலேயே
இதற்கு இன்னா நாற்பது
என்று பெயர் வைத்தனர். இந்நூலில்
வெண்பாக்கள்
ஒவ்வொன்றிலும்
இன்னா என்னும் சொல் திரும்பத் திரும்ப வருகின்றது.
இன்னா-துன்பம்.
இன்று இந்நூலில் காணப்படும் செய்யுட்கள் 41. ஒரு செய்யுள் கடவுள்
வாழ்த்து. அது
சிவன்,
பலராமன், திருமால், முருகன் நால்வரையும்
வணங்காதார் துன்பம் அடைவார்
என்று கூறுகின்றது. இக்கடவுள் வாழ்த்துப்
பாட்டு நூலாசிரியாரல் பாடியிருக்க முடியாது.
இவ்வாழ்த்தும்
நூலோடு
பிறந்ததாயிருந்தால் ‘‘இன்னா நாற்பது’’ என்ற பெயர்
வைத்திருக்கமாட்டார்கள்.
இந்நூலாசிரியர் கபிலர். இப்பெயர் படைத்த புலவர்கள் பலர்.
அவர்களுள்
இந்நூலாசிரியர் எக்கபிலர் என்று துணிந்துகூற முடியவில்லை.
சங்கப் பாடல்களிலே கபிலரது பாட்டு என்றால் அதற்கொரு தனிச்
சிறப்பு. பாட்டின்
சிறப்புக்கு
உதாரணமாகக் கபிலரது பாட்டை எடுத்துக்
கூறுவது பழந்தமிழ்ப் புலவர்கள்
வழக்கம். பத்துப் பாட்டிலே
குறிஞ்சிப்
பாட்டைப் பாடியவர் கபிலர். ஐங்குறு நூற்றிலே
மூன்றாம்
நூறு கபிலர்
பாடியது. பதிற்றுப்பத்திலே 7-வது பத்து கபிலர் இயற்றியது.கலித்தொகையிலே
குறிஞ்சிக்கலி கபிலர் செய்தது. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு,
புறநானூறு முதலிய நூல்களிலும்
இவருடைய பாடல்கள் பல உண்டு.
|