பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் 81

வாழ முடியும். கல்லாத மூடர்களின் சேர்க்கையால் செல்வங்
கிடைப்பதாயினும் அச்சேர்க்கையைக் கைவிடுதல்தான் நலம். நிலைத்த
அறிவும், நெஞ்சிலே உரமும் இல்லாத மனிதருடன் சேர்ந்து வாழாமைதான்
நன்மை தரும். இவ்வாறு அறவுரை கூறுகின்றது ஒரு செய்யுள்.
 
  ‘‘ஐவாய வேட்கை அவா அடக்கல் முன்இனிதே;
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
 

ஐம்பொறிகளின் வழியால் வரும் நினைப்பையும் ஆசையையும்
அடக்கிக்கொள்வதே மிகவும் சிறந்தது; கையிலே பொருள்

கிடைப்பதாயிருப்பினும் கல்லாதவரை விட்டுப் பிரிதலே நன்று; நிலையில்லாத
அறிவும், நெஞ்சிலே உறுதியும் இல்லாத மனிதரைச் சேராமல்

இருப்பதே நலம்’’ (பா.26)

நன்மைகள் இவை என்று எடுத்துரைக்கும் மற்றொரு செய்யுளும்
மனத்திலே பதிய வைத்துக்கொள்ளத்தக்கதாகும்.
 

  ‘‘கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே,
உயர்வுஉள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
எளியர் இவர்என்று இகழ்ந்துரையார் ஆகி
ஒளிபட வாழ்தல் இனிது.
 

கீழ்த்தரமானவர்களுடன் சேராமல் வாழ்வது நலம்; தான் மேலும்
உயர்வதற்கு எண்ணி, அதற்காக ஊக்கம் பெற்று உழைத்தல் நலம்; இவர்
வறியவர் என்று ஒருவரையும் இகழ்ந்து பேசாமல் புகழுடன்
வாழ்வதே நலம்’’ (பா.30)

தன்மானம்

தன்மானத்துடன் வாழாதவன் மனிதன் அல்லன். தன்மானமே உயிர்
எனக் கொண்டவன்தான் மக்களால்