இம
இம் மூன்றே முதன்முதல் மாந்தன்
வாயிலும் தமிழன் வாயிலும் பிறந்த உயிரெழுத்துகள். இவையே, ஆரியமொழிக ளெல்லாவற்றிலுமுள்ள
சுட்டுச் சொற்களின் அடிவேர்கள்.
ஈ |
- ஏ, |
இ |
- எ |
ஊ |
- ஓ |
உ |
- ஒ |
அ +
இ |
= ஐ |
அ + உ |
= ஒள |
|
ஐ, ஒள இரண்டும்
புணரொலிகள்
(diphthongs). |
|
அகர இகரம் ஐகார
மாகும். |
(தொல்.
21) |
|
|
அகர உகரம் ஒளகார
மாகும். |
(
22) |
|
|
ஆஈ ஊஏ ஐஓ ஒளஎனும் |
|
அப்பால் ஏழும் |
|
ஈரள பிசைக்கும் நெட்டெழுத்
தென்ப. |
(தொல்.
எழுத்து. 4) |
இவை தொல்காப்பியர் வகுத்தன வல்ல.
"நூன்மரபு'' என்னும் இயற்பெயரை நோக்குக. "மொழிமரபு'', "தொகைமரபு'', என்னும் இயற்றலைப்புகளையும்
நோக்குக.
'நூன்மரபு' முதல் 'மரபியல்' வரை
தொல்காப்பியம் முழுதும், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தவையே.
ஐவியப்
பாகும். |
(தொல்.
சொல். 385) |
|
|
ஈரள பிசைக்கும் இறுதியி லுயிரே |
|
ஆயியல் நிலையுங் காலத் தானும் |
|
அளபெடை நிலையுங் காலத் தானும் |
|
அளபெடை யின்றித் தான்வருங் காலையும் |
|
உளவென மொழிப பொருள்வேறு படுதல் |
|
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். |
(தொல்.
சொல். 766) |
(சேனா. உரை) "ஒளஒள வொருவன்
றவஞ்செய்த வாறு என்றவழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ஒளஒள வினிச்சாலும்
என்றவழி மாறுபாடு தோன்றும். ஒளஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு, ஒளஉ வினிவெகுளல் எனவும்;
ஒளவவன் முயலுமாறு, ஒளவினித் தட்டுப்புடையல் எனவும்; அளபெடுத்தும் அளபெடாதும் வந்த வழியும், அப்பொருள்
தோன்றியவாறு கண்டுகொள்க. இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப.''
இதனால், குமரிநாட்டு வழக்குகள்
மட்டுமன்றி, இற்றைத் தமிழ் நாட்டுப் பண்டை வழக்குகளும் பல இறந்தொழிந்தன என அறிந்துகொள்க.
வடவர், குமர+ஈசன்=குமரேசன், குல+உத்துங்கன்=
குலோத்துங்கன் என்னும் புணர்ச்சிகளை யடிப்படையாகக் கொண்டு, ஏகார ஓகாரங்களையும்
புணரொலிகளாகக் கொள்வர். அவை ஈகார ஊகாரத் திரிபுகளேயன்றிப் புணரொலிகளல்ல.
|