1
1. வரியெழுத்து ஒலியெழுத்து என
எழுத்து இருவகைப்படும். அவற்றுள், வரியெழுத்து உருவும் உணர்வும் என்றும், ஒலியெழுத்து ஒலியும் தன்மையும்
என்றும், இவ்விரு வகைப்படும்.
2. ஓவியம் வரைதலும் எழுத்து
வரைதலும் எழுதுதல் எனப்படும். எழுத்தும் ஒருவகை ஓவியமே. ஓவியன் ஓர் உருவத்தை உட்புலனாகக் கொண்டு
அதைக் கட்புலனாக எழுதுவது போன்று, எழுத்தாளன் ஓர் ஒலியை உட்புலனாகக் கொண்டு அதைக் கட்புலனாக
எழுதுவது உருவெழுத்து.
எழுத்து என்பது உண்மையில் ஒலியே.
"எழுதப் படுதலின் எழுத்தா கும்மே." (முத்து. 1). காலத்தாலும் இடத்தாலும் நெட்டிடையிட்டவர்க்குப்
பயன்படுமாறு, செவிப்புல வொலி கட்புல வரியாக எழுதப்பட்டது.
தேர்ச்சி பெற்ற வழுவாத ஓவியன்
வரைவே உண்மையான உருவத்தைக் காட்டும். அல்லாக்கால், குதிரை யோவியம் கழுதையும் நாயும் பன்றியும்
போலத் தோன்றலாம். எழுத்து வரிவடிவம் திருத்தமாய் எழுதப்படல் வேண்டும். இன்றேல், குறித்த
ஒலியை உணர்த்தாது; அல்லது வேறோர் ஒலியை உணர்த்தும்.
3. கட்புலனான வரிவடிவு, எழுதினானுக்கும்
பிறருக்கும் உட்புலனாக ஓர் ஒலியை உணர்த்துவது உணர்வெழுத்து.
4. ஒருவன் ஒலித்த எழுத்தொலி,
அவனுக்கும் பிறருக்கும் செவிப்புல னாவது ஒலியெழுத்து.
5. ஒருவன் ஓர் எழுத்தொலியைத் தானே
ஒலித்து அது பிறக்குந் தன்மையறிவது தன்மை யெழுத்து.
மயிலைநாதர் உரையிலும் இலக்கண
விளக்கப் பாயிரத்திலும் மேற்கோளாக வரும் நூற்பாக்கள், ஒலியைப் பெயர் என்று மாற்றியும்,
உணர்வை உண்முடிவு என்றும், குறிக்கின்றன. இம் முறையையே திவாகரமும் பிங்கலமும் தழுவுகின்றன.
தமிழ் உலக முதன்மொழி யென்பது
மட்டுமன்று; அதன் செம்மை யான அமைப்பும், பொருளிலக்கணச் சிறப்பும், உரைநடை வேண்டா எழுநிலச்
செய்யுளிலக்கியமும், முத்தமிழ்ப் புணர்ப்பும், நாற்பொருள் நோக்கும், பல்புலத்துறையும், தமிழர்க்குத்
தனியெழுத்தில்லையென்று கருதுவாரைப் பகுத்தறிவற்ற அஃறிணை யாக்குகின்றன.
நெடுங்கணக் கமைப்பு (உயிரெழுத்து 12)
ஆ - அ (சேய்மைச்சுட்டு) |
|
ஈ - இ (அண்மைச்சுட்டு) |
|
ஊ - உ (முன்மைச்சுட்டு) |
|