பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
124

ஐக

    ஐகார ஒளகாரங்கள் தமித்து நில்லாது சொல்லுறுப்பாக வரும்போது, முறையே அய் அவ் என்றொலித்துத் தனித்தனி ஒன்றரை மாத்திரை கொள்ளும்.

     அகரத் திம்பர் யகரப் புள்ளியும்  
     ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

(மொழி. 23)

   
     அகரத் திம்பர் வகரப் புள்ளியும்  
     ஒளஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்  

ஐகாரம் சொல்லிடையில் யகரத்தை யடுத்து வரும்போது, ஒரு மாத்திரையாகவுங் குறுகும்.

     ஓரள பாகும் இடனுமா ருண்டே  
     தேருங் காலை மொழிவ யினான.

(தொல். மொழி. 24)

எ-டு : இடையன், அரையன்.
தமிழிற் போன்றே பிறமொழிகளிலும் புணரொலிகள் உள.

     எபிரேயம் (Hebrew) ai, au
     அரபி (Arabic) ai, au
     இலத்தீனம் (Latin) ae, oe, au, ei, eu, ui
     கிரேக்கம் (Greek) ai, au, ei, eu, oi, ou, ui (முதலெழுத்துக் குறில்)
  ai, ei, oi (முதலெழுத்து நெடில்)
     சமற்கிருதம் (ஏ, ஓ), ஐ, ஒள.
     பழையாங்கிலம் (Old English) ea, eo, ie, io (குறும்புணரொலி)
  ea, eo, ie, io (நெடும்புணரொலி)
     ஆங்கிலம் (English) i (ai), u (i+00) - ஒருவரிப் புணரொலிகள்)
  oi, ou - இருவரிப் புணரொலிகள்.

    இந்த மொழிகளிலெல்லாம் புணரொலிகளை நீக்க ஒருவரும் கருதவில்லை. உயிர்மெய் யெழுத்திற்குத் தனிவடிவு வகுத்தது போன்றே, புணரொலிகட்கும் தனிவடிவு வகுத்தனர் தமிழர். இது அவரது மேனிலைப்பட்ட மெய்ப்பொருளறிவையே காட்டுகின்றது. மேலையர் இற்றை அறிவியல் கம்மியத்தில் உயரியரேனும், மொழித்துறையிற் குமரித் தமிழருக்குச் சமமானவ ரல்லர். ஓரோலிக்குப் பல வரியும் ஒரு வரிக்குப் பல வொலியும் வகுத்திருப்பதும், ஒலிக்காத வரியை நீக்காதிருப்பதும், இடையிட்ட இரு வரிகளைக் கொண்டு ஓரொலி புணர்ப்பதும், எத்துணை கற்பினும் ஆசிரியனுதவியின்றி ஒரு சொல்லைப் பலுக்க முடியாவாறு மொழியமைத் திருப்பதும், இவ் வுண்மையை எளிதாய் மெய்ப்பிக்கும். ஆதலால், இனிமேலாயினும், ஆங்கில முறையில் தமிழைக் கெடுக்க