New Page 1
தோடும் ஆய்தத்தோடும் உடன்
கூறுதலாயிற்று. இங்ஙனம் உடன் கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம் பெறுதல் வேண்டுவ
தாவான் செல்லுமென்பது" என்றுரைத்தார் பேராசிரியர்.
சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய
முதற் சூத்திர விருத்தியில்,
"ஒரு மொழியைச் சார்ந்துவரு மியல்பின்றித்
தனித்தியங்கு மியல்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையே யெடுத்தோதிக் காட்டலாகாமை யின்,
வருஞ் சூத்திரத்தான் அவற்றிற்கு வேறுவேறு பெயரிட்டு "அவைதாங் குற்றியலிகரங் குற்றியலுகர மாய்தம்
என்றும், அம் மூன்றும் புள்ளி பெறுதல் பற்றிப் பொதுப்பெயராக முப்பாற் புள்ளியும்" என்றும்,
அவை தனித்தெழுதப்படா வாயினும் மொழியொடு சார்த்தி யெழுதப்படுதலின் எழுத்தென்னுங் குறியீட்டிற்
குரியவென்பார்; 'எழுத்தோ ரன்ன' என்றும் ஓதினார்" என்றார்.
நச்சினார்க்கினியரும், "அவைதாம்...
எழுத்தோ ரன்ன" என்னும் சார்பெழுத்து நூற்பாவுரையின் இடையில்,
"ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப்போல
மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியுமென்றார். அதனை இக்காலத்தார்
நடுவு வாங்கியிட் டெழுதுப. இதற்கு வடிவு கூறினார், ஏனை யொற்றுகள்போல உயிரேறாது ஓசை விகாரமாய்
நிற்பதொன்றாகலின், எழுத்தியல் தழா ஓசைகள் போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயா
மென்றார். இதனைப் புள்ளி வடிவிற்றெனவே ஏனை யெழுத்துகளெல்லாம் வரிவடிவின வாதல் பெற்றாம்"என்று
கூறினாரேனும், தொடக்கத்தில்,
"அவைதாம் - மேற்சார்ந்து
வருமெனப்பட்டவைதாம், குற்றிய லிகரங் குற்றியலுகரம் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய
புள்ளி வடிவுமாம்; எழுத்தோரன்ன - அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒருதன்மையாய் வழங்கும் என்றவாறு"
என்று மூவெழுத்தும் புள்ளிபெறுமென ஒருதன்மைப்படவே உரைத்தார்.
மயிலைநாதர், "தொல்லை வடிவின"
என்னும் நன்னூல் நூற்பா வுரையில்,
"ஆண்டு என்ற மிகையானே, தாது, ஏது
என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொதுமொழிகளும்,
குன்றியாது, நாடியாது எட்டியாண்டுளது என்றற்றொடக்கத்துப் புணர் மொழிப் பொருள் வேறுபாடுகளும்,
அறிதற்பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க" என்று
உரைத்தனர்.
"குற்றியலிகரமுங் குற்றியலுகரமும்
புள்ளி பெற்று நிற்கும்; என்னை?
|