பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்5

அ.
மரஞ்செடி கொடிபயிர் மகிழ்ந்து முந்திவளரும்
      மருவறு நச்சுப்பாம்பும் நடஞ்செயும் நல்லபாம்பாம்
முறஞ்செவி யானையும் முதையில் மயங்கிநிற்கும்
      முளையிளஞ் சேய்முதல் மூதும்நோயும் முடிவும்    (இசை)
7. தமிழன் பள்ளியெழுச்சி
'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்' என்ற மெட்டு
பண் - ( பூபாளம்)    
தாளம் - ஈரொற்று
1
கதிரவன் எழுந்துபல் கன்னலு மாகிக்
     கருமங்கள் செய்யவே போகின்றார் மாந்தர்
குதிகொள் சிறாருந்தம் சுவடிகள் தூக்கிக்
     கொண்டு மகிழ்ச்சியாய்ச் செல்கின்றார் பள்ளி
எதிரிகள் உன்னையே இறந்தானென் றின்னே
     எடுத்துப் புதைக்கவும் எழுவது காணாய்
மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம்
     மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா.
2
இரந்தவருமின்று புரந்தவ ரானார்
     எளியவ ரும்இன்று வலியவ ரானார்
புரந்தவர் கொற்றமும் போற்றின வுன்னை
     இரந்தவர் பாலேநீ இரக்கின்றாய் இன்றே
பரந்த வெளியிற்பல் லாயிரங் கல்லே
     பறந்துதிங் கள்செவ்வாய் பார்க்கின்றார் ஏனோர்
கரந்தும் அண்டைவீட்டுள் கால்வைத்த லின்றிக்
     கண்மூடித் தூங்குவாய் கடிதெழு தமிழா.