பக்கம் எண் :

6இசைத்தமிழ்க் கலம்பகம்

3
பெருநாமப் பொறிகளைப் புனைந்தெயி லேற்றிப்
    புலமைபல் துறையிலும் பொலிந்தார்உன் முன்னோர்
அருநூல்கள் முதன்முதல் ஆக்கினார் அவரே
    அறியாமை மீதூரும் அஃறிணை நீயே
கருநாடக மான கரடுறு சகடே
    கண்மூடித் தனமாகக் காலமுஞ் செய்து
வருமானங் குன்றியே வறியவ னானாய்
    வாழ்நாள் வீணாகாமல் வல்லெழு தமிழா.
4
உறவுபகை யென்றே ஓராது மாந்தர்
    ஊனைத் தின்றுவாழ்ந்த பேரிருள் நாடும்
அறிவு மிகும்உயர் ஐரோப் பியரையும்
    அடக்க முனைகின்ற ஆற்றல்கொள் காலம்
வறியவரா யிங்கு வந்துன்னை யண்டி
    வாழ்வு கலைபொருள் வாய்மொழி பெற்றும்
அறுசுவை யுண்டியே ஆக்கிடின் உன்கை
    அருந்த மறுக்கின்றார் ஆய்ந்தெழு தமிழா.
5
உலக முதன்மொழி யாகும்உன் தமிழே
    ஒன்றுபலவாக உலைந்துபோய்ப் பிரிந்து
கலவை இணைஅதி கரிப்பொடு சுருக்கம்
    கடன்இடு குறியினால் பிறமொழிப் பெருக்கம்
பலதிற நாடுசேர் நாவலந் தேயம்
    பாழாக இந்திவந் துன்மொழி தேயும்
ஒலியொடு வரியும்பின் ஒழியவே அண்மை
    உறும்தேவ நாகரி உணர்ந்தெழு தமிழா.