| கதிரவன் எழுந்துபல் கன்னலு மாகிக் |
| கருமங்கள் செய்யவே போகின்றார் மாந்தர் |
| குதிகொள் சிறாருந்தம் சுவடிகள் தூக்கிக் |
| கொண்டு மகிழ்ச்சியாய்ச் செல்கின்றார் பள்ளி |
| எதிரிகள் உன்னையே இறந்தானென் றின்னே |
| எடுத்துப் புதைக்கவும் எழுவது காணாய் |
| மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம் |
| மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா. |