பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்7

8. பழந்தமிழன் சிறப்பு
'ரகுபதி ராகவ ராசாராம்' என்ற மெட்டு
1
தமிழா உன்றன் முன்னவரே தலையாய் வாழ்ந்த தென்னவனே
அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே.
2
பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம்
பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம.்்
(தமிழா)
3
யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம்
ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம.்
(தமிழா)
4
கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம்
கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம்.
(தமிழா)
5
தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம்
ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம்அடுத்தவனாம்.
(தமிழா)
6
காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம்
கங்கை வடக்கும் எட்டினனாம் கயலைப் பனிமலை நட்டினனாம்.
(தமிழா)
7
நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம்
ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம்.
(தமிழா)
8
அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி நெய்தானாம்.
அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிர விளைநன் செய்தானாம்.
(தமிழா)
9
நானில மெங்கும் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு
நாகரி கம்நற்பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு்.
(தமிழா)