|
9. இதுவும் அது (தமிழ நாகரிக முன்மை) |
|
‘கப்பற்பாட்டு’ மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு |
1 |
| மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே | | மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! |
|
2 |
|
| மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே | | மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! |
|
3 |
| பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே | | பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! |
|
4 |
| பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே | | பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே! |
|
5 |
| அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே | | அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே! |
|
6 |
| அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே | | அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே! |
|
7 |
| பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே | | பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே! |
|
8 |
| கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே | | கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே! |
|
9 |
| வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே | | வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே! |
|