|
10 |
| துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே | | பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! |
|
11 |
| இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே | | ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே! |
|
12 |
| கடவுளென்று முழுமுதலைக் கண்டவனும் தமிழனே | | கரையிலின்பம் நுகரவழி காட்டியவன் தமிழனே! |
|
10. தமிழ் வரலாறு |
|
'உன்னையே அன்புடனே வாரியணைந்தேன்' என்ற மெட்டு |
1 |
| குமரிமா மலைப்பிறந்த குழவித் தமிழே | | குலவுமலர் முல்லையணை கிடந்த தமிழே | | ஏனை நிலம்நின்றே இங்குவந்தாய் என்றே | | வானைமறை உன்பகைவர் வம்புரைத்தார் முன்றே |
|
2 |
| மருதநன் னிலத்துருண்டு புரண்ட தமிழே | | மருவியகற் காலந்தலை யெடுத்த தமிழே | | வடதிசையில் நின்றே வடமொழிதான் முன்றே | | கடவஇங்கே வந்தைஎன்றார் கட்டியுரைத் தொன்றே |
|
3 |
| செம்மையாய்ச் செம்பொன் எழுந்திருந்த தமிழே | | சீரியநல் லிரும்பில் தவழ்ந்தூர்ந்த தமிழே | | சீனநிலம் நின்றே சிறந்துவந்தாய் என்றே | | மானமொழி நூலறியார் மயங்கிவிட்டார் பின்றே |
|