பக்கம் எண் :

12இசைத்தமிழ்க் கலம்பகம்

உ.
வடுகாய் முன்தோன்றி வடநாவலே
    வளராரியத்தின் கிளைகள்பின் பல்கிக்
குடமேற் பலகுடும் பாகிய
    கோலங் கொண்டபின்னும் குமரியா மன்னும்    (முதல்)
13. செந்தமிழ்ச் சிறப்பியல்
'அருட்சோதித் தெய்வம் என்னை' என்ற மெட்டு
பண் - (பந்துவராளி)
        தாளம் -ஈரொற்று
1
பாரில்முதல் தாய்மொழியாய்ப் பரந்தெழுந்த செல்வம்
    பனிமலையுந் தோன்றுமுன்பே பயின்றுவந்த செல்வம்
காருலவு குமரிமலைக் கண்வளர்ந்த செல்வம்
    கண்ணுதலாற் குமரிமக்கள் கண்டறிந்த செல்வம்
ஆரியத்தின் அடிப்படையாய் அமைந்தபெருஞ் செல்வம்
    ஆனபெரு மொழியிலெல்லாம் அளவிநின்ற செல்வம்
ஏரணமெய் முதற்பலநூல் இயன்றகலைச் செல்வம்
    இலக்கணஞ்சற் றிணையுமின்றி இலங்குகின்ற செல்வம்.
2
எளிவருமுப் பானொலியால் இயங்குகின்ற செல்வம்
    எப்பொருளும் தகுந்தசொல்லால் இசைக்கவல செல்வம்
அளிமிகுநன் னடுநிலையாய் ஆண்டுவந்த செல்வம்
    அனைவரையும் உறவென்றெண்ணும் அன்புநிலைச் செல்வம்
வளிநிலையில் வாழ்முனிவர் வகுத்தமறைச் செல்வம்
    வையகத்தும் வீடுபெற வழியுரைக்குஞ் செல்வம்
களிமகிழ்கொண் டாடமுதற் கடவுள்கண்ட செல்வம்
    கலித்தொகைதீந் திருக்கோவை கருத்துருக்குஞ் செல்வம்.