| மொழியொடுமன் வரலாற்றின் மூலமெனுஞ் செல்வம் |
| முத்தமிழும் முதற்கழகம் முதிர்ந்திருந்த செல்வம் |
| வழிவழியாய்ப் பாண்டியரே வளர்த்துவந்த செல்வம் |
| வள்ளுவனார் உலகவறம் வகுத்ததிருச் செல்வம் |
| பொழிகடும்பாப் புலவர்பலர் புனைந்தவருஞ் செல்வம் |
| பொன்னுலக வின்பமிங்கே பொங்குகின்ற செல்வம் |
| கழிபலவா மகமொழிகள் கலித்தெழுந்த செல்வம் |
| கன்னியென முன்னைநிலை காணநிற்குஞ் செல்வம். |