பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்15

16. செந்தமிழ்ச் செய்யுட் சிறப்பு
ஐயா சிறுவன் என்ற மெட்டு
ப.
செய்யுள்எந்த மொழியிலுந்தான் சிறந்த நடையே - அது
    சீர்மையொடு முதன்முதற் செந்தமிழ ரிடையே - மிகச் செறிந்த தொடையே
உ. 1
வையகமே மருளத்தமிழ் வண்புல வோரே - தம்
    வாயுரையும் செய்யுளிலே வழங்கிவந் தாரே - அவ்
வழமையினால் நூலுரையின் வடிவதன் சீரே - உரித்
தொகுதியும் பாரே     (செய்.)
2
வெள்ளைகலிப் பாவுமுண்டோ வேறு மொழியே - ஒலி
    வீறுதமிழ் வண்ணங்களும் கூறும் வழியே - ஒரு
வாறுமில்லை கடுமையுந்தான் பாடும் நிலையே - எதும்
கூடவில்லையே     (செய்.)
17. தமிழின்பம் (நாலடியார், 137)
'ஆனந்தம் என் சொல்வேனே' என்ற மெட்டுவகை
எந்நாளுமே இன்பமே - தமிழ்
       தென்னாடரின் தென்புமே - இது
விண்ணாடும் இல் என்பமே
(உரைப்பாட்டு)
தொன்னூற் பெருங்கேள்வித் துறைபோய நல்லறிஞர்
தொகையாகக் கூடிப் பகையே
என்னேனு மின்றியுளம் இசைந்துகூர் ஒண்மதியால்
இனியவுரை யாடி நகையே     (எந்.)