பக்கம் எண் :

16இசைத்தமிழ்க் கலம்பகம்

18. தமிழே தனிமொழி
'நாடெங்கும் புகழும் கிரீடாதிபநிதி' என்ற மெட்டு
ப.
தானாக முந்திய தாய்மொழியாய் வந்த தமிழே தனிமொழி
உ.1
மேனாடுசார் இலத்தீன மொழியிலும்
    மேவுங் கிரேக்கஞ் செர்மானியிலும்
வானோர் மொழியென்கீர் வாணமதிலும் நாம்
    காணும் பல சொல்வேர் மாணுந்தமிழ்
(தானாக)
2
ஆயிரக் கணக்கில் தூய தமிழ்ச்சொற்கள்
    சேயநாள் மறைந்து போய்விடினும்
ஆயும் பொருளெது வாயினும் இந்நாளும்
    ஏயும் தென்சொல் புதிதா யுடனும்
(தானாக)
19. தமிழே தேவமொழி
'நீலகண்ட மகாதேவா' என்ற மெட்டு
பண் - (வசந்தா)
தாளம் - ஈரொற்று
தேவ மொழியுந் தென்னன் தமிழே
    தெளிவு கொண்டு திளைக்க அமிழே
து. ப.
ஆவி யிறந்த மாந்தர் போன்றே
    ஆரியந் தெய்வ மாகுஞ் சான்றே        (தேவ)
அ.
தானே தோன்றித் தலைமை கொண்டு
    தனியொரே குலங்கடவுள் கண்டு
நானிலம் நண்நடுவு நின்று
    நாடும்பொது நன்மறையும் விண்டு
(தேவ)