பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்31

37. தமிழ்நாடு தனிநாடு
'கழுகு மலையின் கந்தவேளே' என்ற மெட்டு
பண் - (காப்பி)
தாளம் - முன்னை
ப.
தனிநாடு தான் தமிழ்நாடு - இனத்
தாழ்வினால் இடை கேடு
து. ப.
வடம் வேங்கடத் திருக்கோடு
குடங்கீழ்தென் வார் கடல் நீடு
(தனி)
உ.
மொழிகலை நூல்உணா முதியபண் பாடு
    முதலிய வடவரின் முழுவேறு பாடு
வழிவழி யாகவே வருந்தொழு வாடு
    வடமொழி யால்இங்கு வன்பெரும் பாடு
வந்துள இந்தியும் வல்லெதிர்ப் பாடு
(தனி)
38. குமரிமலைக் குறத்தி
'பச்சைமலை பவழமலை' என்ற மெட்டு
1
திங்களவன் தென்குமரி எங்கள்மலை நாடு
தென்கடலில் மூழ்கியதே எங்கள்மலை நாடு
2
பனிமலையும் பைங்கடலில் பதுங்கிநின்ற போது
தனிமலையாய் எழுந்திருந்த தெங்கள்மலை நாடு
3
பஃறுளியாற் றங்கரையில் பன்மணிகள் மின்னும்
பஃறிகளில் நள்ளிரவும் பலசரக்கு நண்ணும்