|
39. வடமொழி வந்தவழி |
|
பண் - (பியாகு) தாளம் - முன்னை |
ப. |
| வடமொழி வந்தவழி - தெரியுமா? |
|
உ. 1 |
| வடமேற் கணவாய் வழியாக வந்து | | வதித்தனர் ஆரியர் முதற்கணே சிந்து | | கடுமை யுடன்சிறு பான்மை கலந்து | | கரந்ததே யவர்மொழி கடுகி மறந்து (வட) |
|
2 |
| ஆரிய அடியும் அருந்தமிழ் நிலவும் | | அதனொடு வடதிர விடம்மறை குலவும் | | சீரிய செந்தமிழ்ச் சொற்களே பலவும் | | செயற்கை யாம்சமற் கிருதத்தொடு நிலவும் (வட) |
|
3 |
| வெண்ணிறத் தால்நிலத் தேவரே என்று | | வேதியர் தம்மையே விளம்பிய துண்டு | | நண்ணிய அவர்மொழி விண்மொழி என்று | | நம்பியே தமிழரும் நயந்தனர் பண்டு (வட) |
|
40. தமிழ் இயல்புந் திரிபும் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| அருமை முத்தமிழ்ச் சீரும் | | ஆரி யத்தடி வேரும் | | திரவி டப்பெருந் தூரும் | | தென்மொ ழித்திறம் தேரும். |
|