பக்கம் எண் :

36இசைத்தமிழ்க் கலம்பகம்

41. வடமொழி தமிழினின்று கடன்கொண்டவைப
(இசைந்த மெட்டிற் பாடுக)
ப.
            வடமொழி தமிழினத்திலே
            கடன் கொண்டதற்குக் கணக்கிலே
உ. 1
            நெடுங் கணக்கதன் முறைவரி
            நீளள பெடை வருடொலி
            கடும்புணர்ச்சி நூற்பா வுடன்
            கடனாம் எழுத்துச் சாரியை
(வட)
2
            அடிப் படையோடு மேற்படை
            ஆயிரக் கணக்கான சொல்
            வெடிக்கும் தமிழே வேருடன்
            வேயும் திரிபு விலகவே
(வட)
3
            இலக்க ணம்இசை நாடகம்
            இலகெண் கணியம் மருத்துவம்
            அளக்கும் மெய்ந்நூல் ஏரணம்
            அறம்பொ ருள்முதல் பெயர்த்தேவ
(வட)
42. வடமொழியில் தமிழ்க்கலப்பு
'சின்னஞ்சிறு வயதுமுதல்' என்ற மெட்டு
ப.
நாற்பதுநூற் றாண்டுகளாய் நண்ணியுள்ள வடமொழியே
ஏற்றிலையோர் தென்சொலென்றால் என்னதொரு புதுமையிதே
(நாற்பது)
அ. 1
ஐந்திலிரு பகுதிதமிழ் ஆகிவட மொழியிருக்க
எந்தமொழி யேனும்பெற ஈவதன்றி ஏற்காதென்பார்
(நாற்பது)