|
66. முத்திருமேனியர் (திரிமூர்த்திக்) கொள்கை தமிழரதாகாமை |
|
'தங்கத்தி லேயொரு குறையிருந் தாலும்' என்ற மெட்டு |
1 |
| முத்திரு மேனியர் கொள்கை யிந்நாட்டில் எத்துணையும் இல்லை -பெரு | | முத்தொழி லும்இறை ஆற்றுவன் என்பதே ஒத்ததாம்இவ் வெல்லை. |
|
2 |
| சிவனொடு திருமால் செந்தமிழ்த் தெய்வம் சீரிய வரலாறே சொலும் | | இவரிரு வருமோர் இறையே எய்திய இடத்தாற் பெயர் வேறே. |
|
3 |
| சிவன்திரு மாலெனும் இருவரும் ஒண்ணே அறியார் வாயில்மண் - ஓர் | | அரியநல் லுண்மை அறிவாய் இந்த அழகாம் பழமொழிக் கண். |
|
4 |
| சிவன்முத் தொழிலைச் செய்வான் என்றே செப்பும் மெய்கண்டான் - கரி | | யவனும் அதுவாக் கடவுள் வாழ்த்துக் கம்பன் செய்கின்றான். |
|
5 |
| பிரமனைத் தெய்வம் என்றே தமிழர் பேணியதே யில்லை - தமிழ் | | மரபுறு மதத்தை ஆரியப் படுத்த மருவும்அவன் தொல்லை. |
|
67. தமிழ்த் திருமணம் |
|
'பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு |
ப. |
| தமிழிலே திருமணஞ் செய்க - பழந் | | தமிழரின் முறைகளே தழுவியமைக | | தன் மதிப்புடன் வைக (என்றும்) (தமிழிலே) |
|