|
| பல்லா யிரந்தமிழ்ப் பண்டைநூல் போயின | | கல்லாது தமிழர் கண்டகர் ஆயினர் | | எளியரும் நல்வலியராம் இவ் விருபதாம் நூற்றாண்டிலும் | | இழிஞன் என்னும் பிறப்புநீங்கி இழந்த பெருமை ஈண்டவே. | | தேவ மொழியெனத் தெட்டுங்கீழ் ஆரியம் | | தீவிய தமிழின் தெற்றெனத் தேறியே | | கோயில் வழிபாடரங்கு குடும்பச் சடங்கு திருமணம் | | வாயில்மொழி தமிழே யென்றும் வழங்கி வாழி தமிழனே. |
|
69. தமிழுயரத் தமிழனுயர்தல் |
|
'பசனை செய்மனமே' என்ற மெட்டு |
ப |
| தமிழன் உயர்வழியே | | தமிழின் உயர்நிலையே - தன்மான மிழந்துள்ள |
|
து. ப. |
| இமிழும் வடமொழியே | | இறைவன் வழிபாடத னின்றும் ஒழியே (தமிழன்) |
|
உ. |
| அமிழ்தரு குமரியில் அமைந்த செந்தமிழே | | ஆரிய மதனுக்கும் அடிமணை முதலே | | உமிழும் இழிவு தமிழ் | | உறவே அடிமைத் திறமடைந் துழலும் (தமிழன்) |
|
70. தமிழிசை நாடகமே கருநாடக சங்கீதமும் பரதநாட்டியமும் |
|
'கீதம் இனிய குயிலே' என்ற மெட்டு |
1 |
| கூவும் இனிய குயிலே | | குமரிநிலத் தென்னிசையே | | மேவு கருநாடகமாய் | | மிளிர்கின்ற தெனக் கூவாய். |
|