பக்கம் எண் :

62இசைத்தமிழ்க் கலம்பகம்

2
ஆடும் அழகார் மயிலே
    அற்றை நாடகத் தமிழே
கூடும் பரதம் என்றே
    குலவும் இன்றென அகவாய்
3
பவழக் கூர்வாய்க் கிளியே
    பண்டை முத்தமிழ் நூல்கள்
எவணி றந்தன எனவே
    இனிய குரலிற் கிளவாய்.
71. தமிழை மறைப்பதால் முந்நூல் கெடுதல்
'கைத்தலம் நிறைகனி' என்ற மெட்டு
1
தமிழை மறைப்பதாலே தாங்கெடுமே முந்நூலே
    தாழாமலே யிக்காலே தடுமாலே
இமிழ்நீர் வரைப்பின்மேலே இல்லை வேறிது போலே
     எய்தா தடிமைப் பாலே எடு வேலே.
2
வரலாறு மாந்தனூலும் வளர்கின்ற மொழிநூலும்
    வழி தெரியாமல் மேலை நாட்டாரும்
திரிவாகும் ஆரியத்தைத் தென்னூலின் முன்னூலாகத்
    திண்டாடி மெய்யறிய மாட்டாரே.
3
உண்மையை மாற்ற என்றும் ஒருவராலு மாகாதே
    ஒல்லும் இறையு மாற்றின் இறையாகான்
ஒண்மையொடு நன்மையும் ஓங்கும் குடியரசே
    உண்மை கடைப்பிடித்தல் முறையாகும்.
4
தமிழே உலகமுற்றும் தழுவிய மொழியாகும்
    தகுதியாய் இதையொத்துக் கொள்வீரே
திமித குமுதமென்று திமிலர்போல் விண்ணிற் சென்று
    திங்களை யுற்றவர்க்குச் சொல்வீரே.