|
3 |
| உயிரின வரிசையில் உயர்ந்தவன் மாந்த னாகும் | | உயர்வா யிருத்தல் வேண்டும் வினையாவும் | | பயிலும் ஒலிக ளெல்லாம் பகரும் மொழியா மென்றால் | | பறவை விலங்கும் உயர் திணையாமே. |
|
4 |
| பன்னெடுங் காலமாகப் பற்பலர் முனிவரும் | | பண்படுத்தி யமைத்தார் செந்தமிழை | | எண்ணு மறிவில்லாத இற்றைப் போலித் தமிழர் | | எள்ளியதை யிகழ்வார் எந்த நிலை! |
|
5 |
| செந்தமிழ் என்ற சொல்லும் செங்கோல் என்பது போலச் | | சிறப்பாக இனம்சுட்டும் அடையாகும் | | குன்றிய தமிழ்பல கொடுந்தமிழாய் ஒருசார் | | கொச்சையெனும் இழிந்த நடையாகும். |
|
6 |
| பேசுவதே மொழியாம் பிழையற்ற வழக்கெல்லாம் | | பெரும்புல நூலிலுள்ள நடையென்பார் | | காசு பெற்றுத் தமிழைக் காட்டிக் கொடுப்பார் அதைக் | | காக்கும் செம்மைக் கரையை உடையென்பார். |
|
7 |
| அடுக்குகின்ற அருமை உடைக்கும்நாய் அறியுமோ | | அமைத்ததைக் குலைப்பரே எளியாரும் | | தொடுக்குந் தமிழறிந்தார் தொல்லாசிரியர் வழித் | | தூய மறைமலையார் தெளிவீரே. |
|
83. நாட்டுமொழியின் கட்சிப் பொதுமை |
|
'செந்தாழம் பூவுந் தேன் கமழும்' என்ற மெட்டு |
ப. |
| எந்நாட்டிலுமே தன்னாட்டு மொழி | | எல்லாக் கட்சிக்கும் பொதுவன்றோ. |
|