பக்கம் எண் :

78இசைத்தமிழ்க் கலம்பகம்

(உருத் தொடர்ச்சி)
இந்தியிந் நாட்டிலே வந்த நாளில் நின்று
    ஏதும் பொதுமக்கள் எதிர்த்ததே அங்கின்று
எந்தப் பொதுத் தேர்தலும் புலவோர் நின்று
     இன்றமிழ் காத்திடவும் இல்லையே
(செந்)
88. பழந்தமிழே திரவிடத்தாய்
'செந்தாழம் பூவுந் தேன் கமழும்' என்ற மெட்டு
ப.
எல்லா மக்களும் மறுதலிக்கினும்
     ஈன்றவள் அயலாகுமோ.
உ.1
சொல்லா லறியும் சான்றுகளுடன்
     தொன்னூலும் வரலாறுமே
எல்லா வழியும் திரவிடத்தாய்
     என்றே தமிழைக் கூறுமே
(எல்லா)
2
தென்னோர் தாயகம் குமரி நாடெனத்
     தீந்தமிழினால் தெரியுமே
என்னேனும் திரவிட மொழியிதை
     இயம்புமோ வொரு வரியுமே
(எல்லா)
3
இந்நாவலத் தின்கண்ணே வழங்கும்
     எல்லாத் தமிழ மொழிகளும்
தென்னே நோக்கி வரவரமிகத்
     திருந்தும் இயலும் ஒலிகளும்
(எல்லா)
4
மெல்லோசைகளே தமிழில் இன்றும்
     மிகுந்திருக்கவும் திரவிடம்
வல்லோசைகளே மிகவும் அன்றும்
    வதிந்திருக்கவே பெறுமிடம்
(எல்லா)