|
5 |
| தென்னூல் ஆயிரம் ஆண்டுகட்குமுன் | | திரவிடத் தெதும் இல்லையே | | பன்னூல் துறையும் தமிழிலக்கியம் | | பழமதுரையின் எல்லையே (எல்லா) |
|
6 |
| பின்னே யாரியம் மேற்படை யெனப் | | பெருகினும் அது பிரியுமே | | முன்னே தமிழே அடிப்படையென | | முதுதிரவிடம் தெரியுமே (எல்லா) |
|
89. தமிழைப் பழித்தல் |
|
பண் - (காப்பி) தாளம் - சார்பு |
ப. |
| தமிழைப் பழிக்க லாமோ - தாயான |
|
து. ப. |
| இமிழ்நீர் வரைப்பில் இதன்நேர் சொல்லப் போமோ | | எதிராள ரானாலும் இதைமறுப்பார் தாமோ (தமிழைப்) |
|
உ.1 |
| குமரிக் கண்ணே மாந்தன் குழவிக் காலந் தோன்றிக் | | குறிஞ்சி முல்லைப் பின்னர் மருதந் தவழ்ந்தோங்கித் | | திமிறிக் கொடுந்தமிழ் திரவிடமாய்ச் சென்று | | திகழும் ஆரியத்தின் திரள்முதலாய் நின்ற (தமிழைப்) |
|
2 |
| உள்ளக் கருத்தெல்லாம் தெள்ளக் களிபொங்க | | உணர்த்திப் புலனைந்தும் திளைத்துப் பிழைப்பிங்குக் | | கொள்ளத் துணையாகிக் குன்றாப் பன்னூல் தந்து | | கூறும் இருமைநற் பேறும் பெறவந்த (தமிழைப்) |
|