'மாற்றறியாத செழும்பசும் பொன்னே' என்ற மெட்டு |
பண் - சுருட்டி தாளம் - சார்பு |
1 |
| தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே | | தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே | | ஆய்மதப் பற்றில்லா அடியார்பற் றுண்டோ | | ஆண்டவன் தளியிடித் தவரைக்காப் பின்றே. |
|
2 |
| தானேயெங் குஞ்செல்லின் தன்னாடும் வருமோ | | தன்மொழி விட்டுமே தான்சொல்லப் பெறுமோ | | பூனைக ளேஉற்ற இடத்தோடும் ஒன்றும் | | புல்லிய விலங்குபோல் ஒழுகுதல் நன்றோ. |
|
3 |
| மொழியினா லேமாந்தர் இனமொன்று தோன்றும் | | இனம்பர வியஇடம் நாடாமெஞ் ஞான்றும் | | மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை | | இனமொன்றில் லாமலே நாடென்று மில்லை. |
|
4 |
| நாட்டுப்பற் றொன்றையே நலமென்று சொல்வார் | | நாயகமா யுள்ள மொழியொன்று கொல்வார் | | வேற்றுப் புலத்தவ ரேயிது செய்வார் | | வேடர்போ லேஅறி வில்லார்மீ தெய்வார். |
|