பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்83

சிறப்பு றும்தொழில் செய்வ தேகுலம்
    தெரிந்து வரமாட்டாயா - உண்மை
    தெரிந்து வரமாட்டாயா
(குல)
4
குறுகும் இனத்துள்ளே கொண்டு கொடுத்ததால்
    கூர்மதி யில்லா மக்கள் - சற்றும்
    கூர்மதி யில்லா மக்கள்
பெருகுங் கல்வியாற் பேரறி வில்லாப்
    பிழையும் நோக்க மாட் டாயா - உன்றன்
    பிழையும் நோக்கமாட் டாயா
(குல)
5
பேதைமையினாற் பெருமை பொருளொடு
    பிழைக்கும் வழிகளும் இழந்தாய் - நீ
    பிழைக்கும் வழிகளும் இழந்தாய்
தீது தீரவே தேவர் சொற்படி
    திறந்து வரமாட்டாயா - கூண்டைத்
    திறந்து வரமாட் டாயா
(குல)
6
தமிழன் என்னுமோர் இனமே யில்லெனத்
    தலைக்கு வந்ததே கேடு - இன்று
    தலைக்கு வந்ததே கேடு
இமியுந் தாழ்க்காமல் இனிநீ வெளிவர
    இறைவன் அருளமாட் டானா - ஐயோ
    இறைவன் அருளமாட் டானா - கு.
93. எக்குலத்தான் நல்லமைச்சன்?
(இசைந்த மெட்டிற் பாடுக)
சோழன் வினா
ஒளவையாரே ஒளவையாரே
    அறிதல் வேண்டும் யானொன்று
செவ்வையான மந்திரியைத்
     தேருங் குலமும் ஏதாகும்.