பக்கம் எண் :

82இசைத்தமிழ்க் கலம்பகம்

10
உதக மண்டலத்தை ஒற்றைக்கல் மந்தையென்று
முதலில் இருந்ததுபோல் மொழிவதுவும் எந்நாளோ?
11
கல்கத்தா என்று காணும்வங்க வூர்ப்பெயரைக்
காளிக்கோட் டம்என்று காட்டுவதும் எந்நாளோ?
12
ஆங்கிலத்தில் தான்வழங்கும் அந்தமிழ்நாட் டிடப்பெயர்கள்
நீங்கிப்பின் தனித்தமிழில் நிகழ்வதுவும் எந்நாளோ?
92. குலப் பிரிவினைக் கேடு
'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ' என்ற மெட்டு
1
குலமென் னுஞ்சிறைக் கூண்டிற் குள்ளேநீ
    கொடிய தாழும் போட்டாயா - தமிழா
    கொடிய தாழும் போட்டாயா
நலம தென்னுமே நாயனார் சொலின்
    நாடிக் கேட்கமாட் டாயா - தமிழா
    நாடிக் கேட்கமாட் டாயா
(குல)
2
தமிழர் ஒற்றுமை தனையே மாற்றலர்
    தகர்க்க வைத்தபல் கூண்டை - என்றும்
    தகர்க்க வைத்தபல் கூண்டைக்
குமிழ மூக்கினைக் கொண்ட தமிழனே
    குமைத்து வரமாட்டாயா - இன்னே
    குமைத்து வரமாட்டாயா
(குல)
3
பிறப்பி னால்ஒரு சிறப்பு மில்லெனப்
    பெரிய புலவரே சொன்னார் - தமிழ்ப்
    பெரிய புலவரே சொன்னார்