பக்கம் எண் :

96இசைத்தமிழ்க் கலம்பகம்

107. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு
'நன்றுடையானை' என்ற மெட்டு
பண் - குறிஞ்சி
தாளம் - இணையொற்று
1
பற்றொன்று மில்லாப் பற்பலர் கூடிப் பலவாறு
குற்றங்கள் மல்கக் கொச்சை வெஞ்சொல்லும் இனமல்லா
மற்றும் பல்வேறும் மட்டின்றிக்கொண்டு தூய்மையைச்
செற்றது சென்னைத் தமிழகராதி சிறப்பின்றே.
2
பக்கம் ஒவ்வொன்றும் பல்பிழை சேரப் பொதுவாகும்
மக்கள் பணம்மே மாதொகை வீணிற் செலவிட்டு
மிக்கதென் சொல்லை வடசொல்லாய்க் காட்டி மிடியுறத்
தொக்கது சென்னைத் தமிழகராதி துணிவென்னே.
3
ஆண்டுகால் நூ0றும் ஆகியும் பல்தென் சொல்லின்றித்
தூண்டியும் நன்று தொகுக்காது சொல்லின் பொருளும்மே
வேண்டிய வாறே வேறாகக் கூறி மயல்கொள்ள
ஈண்டிய சென்னைத் தமிழகராதி இழிவன்றோ.
4
ஆங்கிலம் முன்னும் அருந்தமிழ் பின்னும் அகராதி
தேங்கிய தீங்கு தெளிவாகக் காட்டும் திறனாய்வு
பாங்காய் விடுத்தும் பல்கலை மன்றம் பார்க்காதே
தூங்கிய சென்னைத் தமிழகராதி தொடரும்மே.
5
புலவர்க்குங் கற்ற பொதுமக்கட் கும்ஆங்கிலக் கல்வி
வலவர்க்குங் கட்சித் தலைவர்க்குங் கல்வி யமைச்சர்க்கும்
பலவர்க்கும் ஈது தெரிவித்தும் இன்னும் பல்லாண்டு
செலவுயக்குஞ் சென்னைத் தமிழகராதி திருந்தாதே.