|
106. இலக்கணவறிவில்லா எழுத்தாளர் |
|
'மாங்காய்ப்பாலுண்டு' என்ற மெட்டு |
1 |
| இலக்கண மேயின்றி இந்நாளி லேபலர் | | இலக்கியம் இயற்றுகின்றார் - அவரை | | விலக்கியே பயிற்றல் நன்றே. |
|
2 |
| எழுத்தை யறிந்ததும் எழுத்தாளர் என்றுபேர் | | ஏற்றுக் கொள்வார் பலரே - அதனை | | மாற்றச் சொல்வார் இலரே. |
|
3 |
| அறிவிய லுணர்வின்றி அமருங் காதல்ஒன்றே | | வெறியாகச் செய்யுள் செய்வார் - பொருளும் | | எரியாகும் நெய்யிற் பெய்வார். |
|
4 |
| புலமையில் லாதவர் புதுநூலி யற்றுதல் | | நிலமே யில்லா வெற்றனே - மனையும் | | வளமானதாய்க் கட்டலே. |
|
5 |
| இணையாரு மில்லாத எழிலாரும் மறைமலை | | எழுத்தும் ஓரெழுத்தோ வென்றான் - நெஞ்சின் | | அழுத்தமோ அழுத்த நின்றான். |
|
6 |
| தென்சொல்லின் புணர்ச்சியே | | தினையேனும் அறியாதார் | | முன்சொல் ஈற்றில் லகர - மெய்ப்பின் | | என்கொல் வன்மெய் பகர. |
|
7 |
| தமிழை அறியாதார் தமிழெழுத்தை மாற்றத் | | தகுதியுண்டோ நாட்டிலே - வாழ்வார் | | மிகுதியும் ஏமாற்றிலே. |
|