பக்கம் எண் :

94இசைத்தமிழ்க் கலம்பகம்

அடிவாரத்தின் கண்ணே தோன்றி - முல்லை
     ஆயர் புல்லாம் பண்ணே யூன்றிப் - பின்பு
     மருத நாடகம் மருவி யூரொடு
    கருது நாடகம் கல்வி மூவகை
    கொண்டதே தமிழ் கூறுமுக் காலமும்
குறித்தே முனைவரும் கூடிக் - கல்வி
    கூர்ந்தார் அனைவரும் நாடி - நன்று
    முந்து முத்தமிழ் இலக்கி யம்பல
    கண்டு முத்தமிழ் இலக்க ணந்தரப்
பாண்டியன் பின்னே பஃறுளி மதுரையில்
    பைந்தமிழ்க் கழகமே கண்டான் - விண்ணும்
    பரவிய பெரும்புகழ் கொண்டான் - பின்னர்த்
    திடுதி டும்மென நடுநடுங்கியே
    கிடுகி டும்நிலம் கடல்வி ழுங்கவும்
கைதவன் இடைக் கழகம் அலைவாயில்
    கண்டான் அதுங்கடல் கொள்ள - இன்று
    காணும் வைகைக் கரை யுள்ள - வட
    மதுரையிற் கடைக்கழகம் வகுத்தனன்
    அதனை யும்முது குடுமி ஒழித்தனன்.
அன்றி ருந்திங்கே ஆரியம் ஈரியல்
    அரசரை யும்பற்றிக் கொண்டு - தமிழ்
    ஆகாது வழிபாட்டிற் கென்று - மிகத்
    தாழ்த்தி வைத்தது தமிழ ரும்அதை
     ஆழ்த்தி விட்டனர் அடிமை யாகியே
எண்ணரு நூல்கள் இருந்தன தமிழிலே
    எல்லாமே ஆரியஞ் சென்ற - பின்னே
    இறந்தன தமிழிலே மன்ற - எஞ்சி
    இருந்த சொற்பல இழிந்து வழக்கினில்
    இறந்து பட்டன இகழ்ந்து விலக்கவும்
இறுதி யாய்த்தமிழ் எழுத்தையும் ஒழித்திட
    எண்ணினார் தமிழ்ப்பகை யோரே - நன்றி
    என்னேனும் இல்லாத பேரே - இனித்
    தமிழின வேரறின் தடையொன் றின்றியே
    தனிமை யாரியம் தழையும் என்பதே
இந்நிலை யறிந்தின்னே தமிழ் மக்கள்
    எல்லாரும் ஒன்றாகச் சேரும் - தமிழ்
    இன்னலே இல்லாது பாரும.்