|
| எந்தெந்த வேளைக்கும் ஏற்றமை பண்பார் | | இந்தியெதிர்ப்பாளர் ஏனையர் என்பார் (இந்த) |
|
2 |
| பலதமிழ்க் காவலர் என்பார் - அவர் | | ஒருதமிழ்க்கும் ஒன்றும் உதவாத பண்பார் | | கலவை மொழிஎன்றும் கையாளுந் தென் பார் | | கற்றவர்க்கே தமிழ்ச் சொற்றூய்மை என்பார் (இந்த) |
|
3 |
| தனித்தமிழ்க் காவலர் என்பார் - அவர் | | தனித்தமிழ் வல்லாரே தழைக்க விரும்பார் | | நுனித்த தமிழ்ச் சொல்லை நோக்காத பண்பார் | | நொய்ய வகையெல்லாம் பொய்சொல்லும் வன்பார் (இந்த) |
|
111. தமிழைக் காட்டிக்கொடுக்கும் தமிழ்ப் பேராசிரியர் |
|
'மகமதியர் குலத்தில் மாணிக்கமாய் விளங்கும்' என்ற மெட்டு1 | | தமிழைக் காட்டிக் கொடுத்துத் தலைமைப்பதவி தாங்கும் | | தமிழாசிரியர் கூட்டமே - இல்லையோ நாண் | | தான் ஒரு முழ நீட்டமே. |
| 2 | | காட்டிக் கொடுத்துத் தமிழ் நாட்டைக் கெடுப்பவரைக் | | கேட்டிற்குள் ளாக்குமுறையும் - ஒன்றில்லையா | | கூட்டிற்குள் ளாக்குஞ் சிறையும். |
| 3 | | மன்னல மெதுமின்றித் தன்னலமதை யென்றும் | | முன்னலமாக வைப்பவர் - இந்நிலத்தில் | | எந்நலமாக நிற்பவர். |
| | |