|
150. விடுதலை தமிழுக்கு மாறன்மை |
|
'மோட்சமு கலதா' என்ற மெட்டு |
பண் - (சாரமதி) தாளம் - முன்னை |
ப. |
| தாய்மொழிப் பகைதான் விடுதலையா | | தன்மதிமானம் தானிலையா. |
|
து. ப. |
| வாய்மையே சொன்னான் வாரதா | | வாணன் நற்காந்தி வகைதலையா (தாய்) |
|
உ. |
| சேய்மை யாங்கிலச் சீமையிலுள்ள | | சிறந்த முக்கட்சிகளும் செறியுமொரே மொழியே | | தூய்மை யாந்தமிழ் தோதிலா இந்தியினால் | | தொலைதல் திண்ணம் சொன்னான் மறைமலையே (தாய்) |
|
151. விடுதலைக் காலத்தும் நாட்டுவாழ்த்து வேற்று மொழி |
|
'அன்றுவந்ததும் அதே நிலா' என்ற மெட்டுப. | | அன்றிருந்ததும் அயன்மொழி | | இன்று வந்ததும் அயன்மொழி | | என்று தான்இங்குத் தமிழ்மொழி | | ஏத்து நாட்டினை வாழ்த்துமொழி |
| து. ப. | | ஆங்கிலர் கீழே அடிமையாய் | | ஆங்கி லத்தினில் பாடிவந்தோம் | | ஈங்கு விடுதலை யானபின்னும் | | ஏனோ வங்கத்திற் பாடுகின்றோம் (அன்றி) |
| | |